Homeசெய்திகள்சினிமாஅம்மன் அவதாரமும் அனல் பறக்கும் ஆக்ஷனும்.... 'மூக்குத்தி அம்மன் 2' பட புதிய கிளிம்ப்ஸ் வெளியீடு!

அம்மன் அவதாரமும் அனல் பறக்கும் ஆக்ஷனும்…. ‘மூக்குத்தி அம்மன் 2’ பட புதிய கிளிம்ப்ஸ் வெளியீடு!

-

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.அம்மன் அவதாரமும் அனல் பறக்கும் ஆக்ஷனும்.... 'மூக்குத்தி அம்மன் 2' பட புதிய கிளிம்ப்ஸ் வெளியீடு!

தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது.
தற்போது இத்திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மகாசக்தி டிரான்ஸ் என்ற பெயரில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

we-r-hiring

இதில் நயன்தாரா அம்மன் அவதாரத்தில் தோன்றி, அநீதிகளை எதிர்த்து அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளில் ஈடுபடும் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
மேலும், இந்த கிளிம்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ள வெஸ்டர்ன் ஸ்டைல் அம்மன் பாடல் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தையும் பெரும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அவரது துள்ளலான இசை பின்னணியில் இந்த கிளிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.அம்மன் அவதாரமும் அனல் பறக்கும் ஆக்ஷனும்.... 'மூக்குத்தி அம்மன் 2' பட புதிய கிளிம்ப்ஸ் வெளியீடு!இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தர். சியின் சுவாரஸ்யமான இயக்கம், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’, திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திருவிழா விருந்தாக அமையும் என்று நம்பப்படுகிறது.

MUST READ