Homeசெய்திகள்சினிமா‘வேட்டுவம்’ படத்திலிருந்து வெளியான தெறிக்கும் புதிய போஸ்டர்!

‘வேட்டுவம்’ படத்திலிருந்து வெளியான தெறிக்கும் புதிய போஸ்டர்!

-

- Advertisement -

வேட்டுவம் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.‘வேட்டுவம்’ படத்திலிருந்து வெளியான தெறிக்கும் புதிய போஸ்டர்!

​தமிழ் திரையுலகில் தனது கூர்மையான அரசியல் பார்வைகளாலும், எதார்த்தமான சமூகக் கதைக்களங்களாலும் தனித்துவமான முத்திரையைப் பதித்து வரும் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித். ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘சார்பட்டா பரம்பரை’ என மக்களின் வாழ்வியலைத் திரையில் செதுக்கிய இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘வேட்டுவம்’. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் இப்படத்தில் இருந்து வெளியான மேக்கிங் வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் படக்குழு அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. ‘வேட்டுவம்’ படத்திலிருந்து வெளியான தெறிக்கும் புதிய போஸ்டர்!அந்த வகையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆர்யாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்யா இந்த படத்தில் தர்மராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்குத் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
​இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து அட்டக்கத்தி தினேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சோபிதா துலிபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே, இப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் ஒரு மிக முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. ‘வேட்டுவம்’ படத்திலிருந்து வெளியான தெறிக்கும் புதிய போஸ்டர்!​இவ்வாறு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பா.ரஞ்சித்தின் இந்த தனித்துவமான படைப்பு பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ