Homeசெய்திகள்சினிமா'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் வீட்டில் குட்டி தேவதை.... குவியும் வாழ்த்துகள்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரின் வீட்டில் குட்டி தேவதை…. குவியும் வாழ்த்துகள்!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்துக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் வீட்டில் குட்டி தேவதை.... குவியும் வாழ்த்துகள்!

தனது இயல்பான இயக்கம் மற்றும் எதார்த்தமான கதைக்களத்தால் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற வெற்றித் திரைப்படத்தைக் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்றவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவர் இயக்குநராக மட்டுமின்றி ‘வித் லவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரமெடுத்துத் தனது திறமையை காட்டினார். அடுத்தது சிவராஜ்குமாரின் பிகாசோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் வீட்டில் குட்டி தேவதை.... குவியும் வாழ்த்துகள்! ​இப்படி திரையுலகில் அடுத்தடுத்த அவதாரம் எடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தான் இவர், தனது காதலி அகிலாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கரம் பிடித்தார். அபிஷன் – அகிலா தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தங்களின் திருமணநாள் புகைப்படங்களையும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார் அபிஷன்.'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் வீட்டில் குட்டி தேவதை.... குவியும் வாழ்த்துகள்! இந்நிலையில் அபிஷன், தான் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி விட்டதாக தன் குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அபிஷன் – அகிலா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ