Homeசெய்திகள்சினிமாமுன்பதிவில் சீறிப்பறக்கும் சூர்யாவின் 'சீன்'!

முன்பதிவில் சீறிப்பறக்கும் சூர்யாவின் ‘சீன்’!

-

- Advertisement -

சூர்யாவின் சீன் திரைப்படம் முன்பதிவில் சாதனை படைத்து வருகிறது.முன்பதிவில் சீறிப்பறக்கும் சூர்யாவின் 'சீன்'!

திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே வசூலில் சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது. ஆவேசம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், முழுநீள கமர்ஷியல் மற்றும் நகைச்சுவை அதிரடிப் படமாகத் தயாராகியுள்ளது.
தற்போது கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரையரங்க முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் போன்ற முன்னணி திரையரங்க வளாகங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் அதிவேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன. முன்பதிவில் சீறிப்பறக்கும் சூர்யாவின் 'சீன்'!இந்த அதிரடி டிக்கெட் விற்பனை, படம் வெளியாகும் முன்னரே படத்தின் மீதான பிரம்மாண்ட எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இத்திரைப்படம் காலை 6 மணிக்குச் சிறப்பு காட்சிகளுடன் வெளியாகவுள்ளது இப்படத்திற்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது. ரசிகர்களிடம் இருந்து சாதகமான விமர்சனங்கள் கிடைக்கும் பட்சத்தில், தமிழக திரையரங்க வரலாற்றிலேயே சூர்யாவின் திரைப்படங்களில் மிக அதிக முதல் நாள் வசூல் சாதனைப் படைத்த படமாக ‘சீன்’ உருவெடுக்க வாய்ப்புள்ளது. நடிகர் சூர்யா முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்குச் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். முன்பதிவில் சீறிப்பறக்கும் சூர்யாவின் 'சீன்'!ஜித்து மாதவனின் துள்ளலான இயக்கம், அதிகாலை 6 மணி காட்சி சிறப்பு மற்றும் சூர்யாவின் எனர்ஜியான நடிப்பு போன்றவை இணைந்துள்ளதால், திரையரங்குகளில் ஒரு அதிரடியான கொண்டாட்ட விருந்து காத்திருக்கிறது எனச் சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

MUST READ