Homeசெய்திகள்சினிமாதியேட்டர்களை கலக்க வரும் சந்தானம்.... 'லவ் பைட்' பட ரிலீஸ் அப்டேட்!

தியேட்டர்களை கலக்க வரும் சந்தானம்…. ‘லவ் பைட்’ பட ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

சந்தானம் நடிப்பில் உருவாகும் லவ் பைட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தியேட்டர்களை கலக்க வரும் சந்தானம்.... 'லவ் பைட்' பட ரிலீஸ் அப்டேட்!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதன் பின் கதாநாயகனாக களம் இறங்கியவர் சந்தானம். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘லவ் பைட்’ . ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டியோ ஃபாக்ஸ்ன், பிரதீப் பி.ஜே. மற்றும் வேய்ன் பேவி ஆகியோர் இசையமைக்கின்றனர். ஹாரர் காமெடி டிராமாவாக உருவாகியுள்ள
இத்திரைப்படத்தின் அனைத்துக் கட்டப் படப்பிடிப்புகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தியேட்டர்களை கலக்க வரும் சந்தானம்.... 'லவ் பைட்' பட ரிலீஸ் அப்டேட்!இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 18 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டத் தொழில்நுட்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், விரைவில் இப்படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ