Homeசெய்திகள்சினிமா'அரசன்' ப்ரோமோ ரிலீஸ் எப்போது?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘அரசன்’ ப்ரோமோ ரிலீஸ் எப்போது?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

அரசன் பட ப்ரோமோ குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.அரசன் ப்ரோமோ ரிலீஸ் எப்போது?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தீபாவளி ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் சிறப்புப் ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.
தீபாவளிப் பண்டிகை மிகச் சமீபத்தில் நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் அந்த அதிகாரப்பூர்வப் ப்ரோமோ வெளியாகாதது STR ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சில தொழில்நுட்பக் காரணங்களால் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாட்களாகத் தங்கள் நாயகனின் மாஸ் அவதாரத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த சிம்பு ரசிகர்கள், இந்தத் திடீர் தாமத செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், தாமதமானாலும் தரமான ஒரு சம்பவத்துடன் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'அரசன்' ப்ரோமோ ரிலீஸ் எப்போது?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

we-r-hiring

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள அரசன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், யோகலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ