பிரபல நடிகை ஒருவர் மூன்று முறை சூர்யாவின் படத்தை நிராகரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை நஸ்ரியா நசீம் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, நஸ்ரியா குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை மேடையில் பகிர்ந்துகொண்டார். “நஸ்ரியா ஒரு சிறந்த நடிகை. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என எனக்கு நீண்ட நாட்களாகவே ஆசை இருந்தது. அதற்கு முன் மூன்று முறை எனது படங்களில் நடிக்க அவரிடம்கேட்டபோது, அந்த மூன்று வாய்ப்புகளையும் அவர் நிராகரித்துவிட்டார். தற்போது நான்காவது முயற்சியாகத்தான் ‘சீன்’ படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்” என்று ஜாலியாகக் கூறினார்.
முன்னதாக, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘புறநானூறு’ திரைப்படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாக இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்த படம் தள்ளிப்போன சூழலில், தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கமர்சியல் படத்தில் சூர்யாவும், நஸ்ரியாவும் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்குத் திரும்பியுள்ள நஸ்ரியாவின் கதாபாத்திரமும், சூர்யாவுடனான அவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று நம்பப்படுகிறது.
