Homeசெய்திகள்சினிமாசிரிப்பு சரவெடியை கொடுக்க வரும் 'தமிழ் படம் 3'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சிரிப்பு சரவெடியை கொடுக்க வரும் ‘தமிழ் படம் 3’…. புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

தமிழ் படம் 3 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சிரிப்பு சரவெடியை கொடுக்க வரும் 'தமிழ் படம் 3'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தமிழ் திரையுலகில் ஸ்பூஃப் வகை நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்த மாபெரும் வெற்றி ஃப்ரான்சைஸ் தான் ‘தமிழ் படம்’. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவர்ந்தது. எனவே இதன் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ‘தமிழ் படம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 5) முதல் தொடங்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திலும், மிர்ச்சி சிவா கதாநாயகனாக களம் இறங்குகிறார். மேலும், இவருக்கு ஜோடியாகப் பிரபல நடிகை அதுல்யா ரவி ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக வெளியாகி ஹிட் அடித்த திரைப்படங்கள், ட்ரெண்டிங் சம்பவங்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களின் மாஸ் காட்சிகளைத் தனது பாணியில் கலாய்த்து சிரிக்க வைப்பதற்கு மிர்ச்சி சிவா – சி.எஸ். அமுதன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருப்பது ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சிரிப்பு சரவெடியை கொடுக்க வரும் 'தமிழ் படம் 3'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், அனுபவமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. திரையரங்குகளில் மீண்டும் ஒரு சிரிப்பு சரவெடியைக் கொடுக்கவுள்ள ‘தமிழ் படம் 3’ படத்தின் படப்பிடிப்பு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் இந்த படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்பதை அடித்துவிட்டு இன்டர்கேலக்டிக் சூப்பர் ஸ்டார் சிவா என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் தமிழ் படம் 3 என்ற டைட்டிலுடன் ஏலியன் அத்தியாயம் என்ற ஹேஷ் டேக்கும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ