Homeசெய்திகள்சினிமா2027 பொங்கல் பண்டிகையில் மோதும் படங்களின் லிஸ்ட்!

2027 பொங்கல் பண்டிகையில் மோதும் படங்களின் லிஸ்ட்!

-

- Advertisement -

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கியமான சில படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இதனால் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.2027 பொங்கல் பண்டிகையில் மோதும் படங்களின் லிஸ்ட்!

முதலாவதாக, ‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘புருஷன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என சுந்தர். சி அப்டேட் கொடுத்துள்ளார். ஏ.சி.எஸ். அருண் குமார் தனது பென்ட்ஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் விஷாலுடன் இணைந்து தமன்னா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் ரேஸில் இணைய இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று நம்பப்படுகிறது.2027 பொங்கல் பண்டிகையில் மோதும் படங்களின் லிஸ்ட்! அடுத்ததாக, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீரியட் ஆக்சன் திரைப்படமான ‘வேட்டுவம்’ களமிறங்குகிறது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள நிலையில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய அனுபவங்கள், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் உருவாக்கியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. ஷாலினி அஜித் குமார் தயாரித்துள்ள இந்த ஆவணப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.2027 பொங்கல் பண்டிகையில் மோதும் படங்களின் லிஸ்ட்!மேலும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் விஜே சித்து நடிப்பில் உருவான ‘டயங்கரம்’ திரைப்படமும் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இவற்றுடன் தமிழ் சினிமாவின் மாபெரும் ஹாரர் த்ரில்லர் ஃபிரான்ச்சைஸான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகமான ‘டிமான்டி காலனி 3’ திரைப்படமும் பொங்கல் ரேஸில் இணைகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படமும் ஒரே நேரத்தில் மோதவுள்ளது.
இந்த 5 பிரம்மாண்ட படங்களும் ஒரே நாளில் பொங்கல் பந்தயத்தில் களம் இறங்குவதால், 2027 பொங்கல் பாக்ஸ் ஆபீஸ் மோதல் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ