இயக்குனர் சுந்தர் .சி, புருஷன் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப் படங்களை வழங்கிய விஷால் மற்றும் சுந்தர். சி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் ‘புருஷன்’. இத்திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமன்னா பாட்டியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், முக்கிய நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.சி.எஸ். அருண் குமார் தனது பென்ட்ஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ஏற்கனவே சுந்தர் .சி விஷால் கூட்டணியில் ஆம்பள, மதகஜராஜா திரைப்படம் வெளியானது. அதில் மதகஜராஜா திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அதேபோல் தற்போது உருவாகி வரும் புருஷன் திரைப்படமும் 2027 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதனை சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் சுந்தர் .சி யும் உறுதி செய்துள்ளார். எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
