Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' படத்துல எனக்கு இன்னும் திருப்தி இல்ல..... இயக்குனர் சுந்தர். சி!

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துல எனக்கு இன்னும் திருப்தி இல்ல….. இயக்குனர் சுந்தர். சி!

-

- Advertisement -

இயக்குனர் சுந்தர். சி மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பேசி உள்ளார்.'மூக்குத்தி அம்மன் 2' படத்துல எனக்கு இன்னும் திருப்தி இல்ல..... இயக்குனர் சுந்தர். சி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுந்தர். சி, தற்போது விஷால் நடிக்கும் ‘புருஷன்’ படத்தை இயக்கி வருகிறார். அதற்கு முன்பாக அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
​இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடைபெற்ற சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, திரைப்படம் உருவாக்குவதில் தான் எதிர்கொள்ளும் பயத்தையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார்.'மூக்குத்தி அம்மன் 2' படத்துல எனக்கு இன்னும் திருப்தி இல்ல..... இயக்குனர் சுந்தர். சி!அவர் கூறியதாவது, “எனக்கு ஒவ்வொரு முறை படம் பண்ணும் போதும் ரொம்ப பயமா இருக்கும். ‘மூக்குத்தி அம்மன் 2’ நாளைக்கு ரிலீஸ் ஆகப் போகுதுன்ற பயத்துல கடந்த 4 நாளா நான் தூங்கவே இல்லை. சத்தியமா சொல்றேன், நான் பொய் சொல்லல. ஒவ்வொரு படத்தோட கடைசி நாள் ஷூட்டிங் அப்பவும், ‘கடவுளே எனக்கு இன்னொரு படம் பண்ற வாய்ப்பைக் கொடு’ன்னு தான் வேண்டிப்பேன். படம் ரிலீஸாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையிலும், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துல எனக்கு இன்னும் திருப்தி வராததால, அதை இன்னும் ஃபைன் டியூன் பண்ணி ஒர்க் பண்ணிட்டு தான் இருக்கேன்” என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளார்.
​பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மூத்த இயக்குநராக இருந்தபோதிலும், ஒவ்வொரு படத்தின் போதும் சுந்தர். சி காட்டும் இந்த அர்ப்பணிப்பும், படம் குறித்த பயமும் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ