Homeசெய்திகள்சினிமாவிஜய்யை வைத்து படம் இயக்காதது ஏன்? – மனம் திறந்த இயக்குநர் சுந்தர்.சி!

விஜய்யை வைத்து படம் இயக்காதது ஏன்? – மனம் திறந்த இயக்குநர் சுந்தர்.சி!

-

- Advertisement -

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, நடிகர் விஜய்யை வைத்து இதுவரை படம் இயக்காததற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் படம் இயக்குவது தொடர்பாகப் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் தனக்குக் கதை சொல்லத் தெரியாததே இருவரும் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

we-r-hiring

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

விஜய்யுடன் படம் அமையாதது ஏன்?

முதலமைச்சர் விஜய்யை வைத்து படம் இயக்குவது தொடர்பாகப் பலமுறை பேசியுள்ளதாகத் தெரிவித்த சுந்தர்.சி, “என்ன பிரச்சினை என்றால் எனக்குக் கதை சொல்ல வராது. விஜய் முழுக் கதையையும் கேட்டுத்தான் நடிப்பார். இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றாகச் சரியாக அமையவில்லை. என்னுடைய பல வெற்றிப் படங்கள் கூட விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்திய படங்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சியின் இந்தப் பேட்டி தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தால் எப்படிப்பட்ட படம் உருவாகியிருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மூக்குத்தி அம்மன் 2 பற்றி சுந்தர்.சி

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் முழுக்க முழுக்க பக்திப் படமாக இல்லாமல், பக்தி கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களும் தற்போதைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளும் ஒன்றோடொன்று இணையும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் சுமார் 99 சதவீதம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 15 காட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் சினிமாவில் AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த படம் ‘புருஷன்’

தனக்கு நடிப்பதைவிட இயக்குவதில்தான் அதிக விருப்பம் இருப்பதாகக் கூறிய சுந்தர்.சி, தனது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புருஷன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட ரஜினி படம் நடக்குமா?…. சுந்தர். சி யின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

MUST READ