Homeசெய்திகள்சினிமா'சீன்' படத்தைத் தொடர்ந்து ஜித்து மாதவனின் அடுத்த படம்... ஹீரோ இவர்தானா?

‘சீன்’ படத்தைத் தொடர்ந்து ஜித்து மாதவனின் அடுத்த படம்… ஹீரோ இவர்தானா?

-

- Advertisement -

சீன் படத்தை தொடர்ந்து ஜித்து மாதவனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.'சீன்' படத்தைத் தொடர்ந்து ஜித்து மாதவனின் அடுத்த படம்... ஹீரோ இவர்தானா?

‘ஆவேசம்’ திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்று இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவருடைய இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லேன் ஆகியோர் நடித்திருந்த ‘சீன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் சுவாரஸ்யமான மேக்கிங் மற்றும் சிறப்பான கதைக்களம் திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘சீன்’ திரைப்படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவனின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜித்து மாதவன், தனது அடுத்த திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானை நடிக்க வைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகிறது. எனவே இக்கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 'சீன்' படத்தைத் தொடர்ந்து ஜித்து மாதவனின் அடுத்த படம்... ஹீரோ இவர்தானா?ஒருவேளை இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ஜித்து மாதவன் – துல்கர் சல்மான் கூட்டணியில் உருவாகும் திரைப்படமும் நிச்சயம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஜித்து மாதவன் – துல்கர் சல்மான் கூட்டினியில் உருவாகும் புதிய படம் குறித்த மற்ற விவரங்கள் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ