Homeசெய்திகள்சினிமா'அரசன்' படம் ரிலீஸ் என்னைக்குன்னு தெரியுமா?.... தீயாகப் பரவும் புதிய தகவல்!

‘அரசன்’ படம் ரிலீஸ் என்னைக்குன்னு தெரியுமா?…. தீயாகப் பரவும் புதிய தகவல்!

-

- Advertisement -

அரசன் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'அரசன்' படம் ரிலீஸ் என்னைக்குன்னு தெரியுமா?.... தீயாகப் பரவும் புதிய தகவல்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம், தமிழ் திரையுலகின் மிக முக்கியமான எதிர்பார்ப்பிற்குரிய படமாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவில் மாபெரும் தடம் பதித்த ‘வடசென்னை’ திரைப்படத்தின் யுனிவர்ஸில் இக்கதையும் பயணிக்கலாம் என்ற பேச்சு எழுந்த உடனே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எல்லை கடந்து சென்றுவிட்டது.'அரசன்' படம் ரிலீஸ் என்னைக்குன்னு தெரியுமா?.... தீயாகப் பரவும் புதிய தகவல்!வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு இதுவரை நடித்திராத ஒரு முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்திலும், புதிய பரிமாண அவதாரத்திலும் தோன்றுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். அதன்படி படத்திலிருந்து வெளியான அடுத்தடுத்த ப்ரோமோக்களில் சிம்புவின் வெறித்தனமான தோற்றங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்ச கட்டத்தில் ஏற்றிவிட்டது. மேலும் இப்படத்திற்கு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி காத்துக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்பிற்கும் மேலும் தீனி போடும் விதமாக, தீபாவளி விருந்தாக இன்றைய தினம் (நவம்பர் 8) வெளியான ‘அரசன்’ படத்தின் மிரட்டலான கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி, செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.'அரசன்' படம் ரிலீஸ் என்னைக்குன்னு தெரியுமா?.... தீயாகப் பரவும் புதிய தகவல்!இருப்பினும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது அரசன் திரைப்படமானது 2027 ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியாகும் என்று புதிய தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ