Homeசெய்திகள்சினிமாஅனல் பறக்கும் கிளைமாக்ஸ்... ஜூனியர் என்டிஆரின் 'டிராகன்' படத்தில் மாஸ் ஆக்ஷன் காட்சி!

அனல் பறக்கும் கிளைமாக்ஸ்… ஜூனியர் என்டிஆரின் ‘டிராகன்’ படத்தில் மாஸ் ஆக்ஷன் காட்சி!

-

- Advertisement -

ஜூனியர் என்டிஆர் – இன் டிராகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

‘தேவரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் பிரம்மாண்ட பான்-இந்தியத் திரைப்படம் ‘டிராகன்’.அனல் பறக்கும் கிளைமாக்ஸ்... ஜூனியர் என்டிஆரின் 'டிராகன்' படத்தில் மாஸ் ஆக்ஷன் காட்சி!‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘சலார்’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் பிரசாந்த் நீல் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ், டி சீரிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகின்றன. ‘கே.ஜி.எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ருக்மிணி வசந்த், அனில் கபூர், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் கூட்டணி என்றவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக, ‘டிராகன்’ படத்தின் மெகா கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பிற்காகத் தற்போது பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றனதாம். அனல் பறக்கும் கிளைமாக்ஸ்... ஜூனியர் என்டிஆரின் 'டிராகன்' படத்தில் மாஸ் ஆக்ஷன் காட்சி!வருகின்ற டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இந்த கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆரின் மிரட்டலான மற்றும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளைத் தொடர்ந்து, ஒரு மாஸ் பாடலின் படப்பிடிப்பையும் நடத்தப் படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் 2027 ஜூன் 11 அன்று உலகளவில் மிக பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனல் பறக்கும் இந்த கிளைமாக்ஸ் அப்டேட், என்டிஆர் ரசிகர்களுக்குச் சரியான மாஸ் விருந்தாக அமையப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

MUST READ