அரசன் படம் குறித்து முக்கிய பிரபலம் பேட்டி கொடுத்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் முதன்முறையாக இணையும் அரசன் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இத்திரைப்படம் வெற்றிமாறனின் ஐகானிக் திரைப்படமான ‘வடசென்னை’ உலகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் திரையுலக வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுவதால் ரசிகர்கள் மத்தியில் இதன் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.
இந்நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தின் ஆக்ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் குறித்து இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
#PeterHein Master about ARASAN 💥
– Just saying #Arasan itself gives me goosebumps. The climax sequence is going to be something very big. Even just saying Arasan climax gives me goosebumps.
– I’m waiting to shoot that climax sequence. Whenever I get an idea, I make a voice note for it. #Vetrimaaran has shared the idea for it. https://t.co/VIox9Kfuwr— Movie Tamil (@_MovieTamil) November 9, 2026

அதன்படி அவர், “‘அரசன்’ என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் பிரம்மாண்டமானதாக அமையவுள்ளது. ‘அரசன் கிளைமாக்ஸ்’ என்று நினைக்கும் போதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. அந்த கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளுக்காக எனக்கு எப்போது புதிய யோசனைகள் தோன்றினாலும் அதை வாய்ஸ் நோட்டாக பதிவு செய்து வைத்துக் கொள்வேன். இயக்குநர் வெற்றிமாறன் இதற்கான பிரத்யேக ஐடியாவைப் பகிர்ந்துள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.
பீட்டர் ஹெயினின் இந்த மாஸ் அப்டேட், வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
