Homeசெய்திகள்சினிமா'சூர்யா 49' படத்தோட மாஸ் டைட்டில் இதுதானா?

‘சூர்யா 49’ படத்தோட மாஸ் டைட்டில் இதுதானா?

-

- Advertisement -

சூர்யா 49 படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'சூர்யா 49' படத்தோட மாஸ் டைட்டில் இதுதானா?

‘கங்குவா’ திரைப்படத்திற்குப் பிறகு தனது கதைத் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் சூர்யா, ஒரே ஆண்டில் 3 மெகா பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளார். ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மற்றும் சீன் ஆகிய மூன்று படங்களுமே சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்துள்ளது. அதிலும் கடந்த நவம்பர் 6ஆம் தேதி வெளியான சீன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.145 கோடிக்கும் அதிகமான வசூலை நெருங்கி சாதனை படைத்து வருகிறது. இவ்வாறு தொடர் வெற்றிகளை கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக உருவெடுத்துள்ள சூர்யா, தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார்.
அந்த வகையில், சூர்யாவின் 48-வது திரைப்படத்தை ‘ஜெய் பீம்’ மற்றும் ‘வேட்டையன்’ படங்களின் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 49-வது திரைப்படம் குறித்த மெகா அப்டேட் வெளியாகியுள்ளது. 'சூர்யா 49' படத்தோட மாஸ் டைட்டில் இதுதானா?‘செல்ஃபி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ ஆகிய படங்களின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளார் என ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. மேலும் மண்டாடி படத்தைப் போலவே இந்த படமும் கடல் சார்ந்த வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளதாகவும் இத்திரைப்படத்திற்கு ‘படகோட்டி’ எனப் பெயரிடப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இத்திரைப்படம் உருவாகப் போகிறது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ