Homeசெய்திகள்சினிமாகவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் - 'ஓம்' பட ட்ரெய்லர் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் – ‘ஓம்’ பட ட்ரெய்லர் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

-

- Advertisement -

ஓம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் - 'ஓம்' பட ட்ரெய்லர் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஓம்’. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டாடி தீர்க்க மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படம் திரைக்கு வர இன்னும் வெறும் 10 நாட்களே மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கனவே சாய் அபியங்கரின் இசையில் வெளியான பாடல்களும், இயக்குநர் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல்களும், படத்தின் ப்ரோமோ வீடியோவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு படத்தின் மீதான ஆவலைப் பெருக்கியுள்ளன.கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் - 'ஓம்' பட ட்ரெய்லர் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!படத்தின் ரிலீஸ் தேதி மிக அருகில் இருப்பதால், ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் மற்றும் மம்மூட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘ஓம்’ ட்ரெய்லர் அப்டேட்டிற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தினை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ஆர் – டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ