Homeசெய்திகள்சினிமாஅவர் படத்தில நடிப்பேன்னு நினைக்கவே இல்ல .... 'அரசன்' படம் குறித்து பிரியங்கா மோகன் நெகிழ்ச்சி!

அவர் படத்தில நடிப்பேன்னு நினைக்கவே இல்ல …. ‘அரசன்’ படம் குறித்து பிரியங்கா மோகன் நெகிழ்ச்சி!

-

- Advertisement -

நடிகை பிரியங்கா மோகன் அரசன் படம் குறித்து பேசி உள்ளார்.அவர் படத்தில நடிப்பேன்னு நினைக்கவே இல்ல .... 'அரசன்' படம் குறித்து பிரியங்கா மோகன் நெகிழ்ச்சி!

​இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா மோகன், சமீபத்தில் விழா மேடை ஒன்றில், அரசன் படம் குறித்தும் தனது கதாபாத்திரம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
​அதன்படி அவர், “எனக்கு இயக்குநர் வெற்றிமாறன் சாரை ரொம்பவே பிடிக்கும்; அவருடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ‘அரசன்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம். அதேபோல், சிலம்பரசன் சாருடன் நான் இணைந்து நடிக்கும் முதல் படமும் இதுதான்.

we-r-hiring

​நான் இதுவரை பல கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறேன், ஆனால் ‘அரசன்’ படத்தில் நடிப்பது எனக்கு உண்மையிலேயே ஒரு மாயாஜால அனுபவமாக இருக்கிறது. இப்படத்திற்காக முதன்முறையாக வடசென்னை தமிழில் பேச கற்றுக் கொண்டு நடித்துள்ளேன். படத்தில் சிலம்பரசன் சாரையும் ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஒரு புதிய பரிமாணத்தில் காண்பார்கள்” என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

 

MUST READ