பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், தொடர்களின் கதாநாயகியாகவும் தனது கலைப்பயணத்தைத் தொடங்கி, இன்று வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக மிளிர்ந்து வருகிறார். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு போன்ற பிற தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தித் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களில் நடித்த இவர், தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜ் வேலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், இவர்களது திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கர் – ராஜ் வேலு தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

