இசையமைப்பாளர் அனிருத்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன், ஷாருக்கான், ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து, இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார்.
தற்போது அனிருத்தின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சன் குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனை அனிருத் கரம்பிடித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும், பிரபல தொழிலதிபராகவும் திகழும் காவ்யா மாறனை திருமணம் செய்ததன் மூலம், பல கோடி மதிப்புக்கு மாப்பிள்ளையான அனிருத், தற்போது திரையுலகின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் கிரிஸில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருமணக் கோலத்தில் ஜொலிக்கும் காவ்யா மாறன் மற்றும் அனிருத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் ரசிகர்களும் அனிருத் மற்றும் காவியா மாறனுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

