இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் சீன்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இப்படம் அமைந்திருந்ததால் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருவதுடன், தமிழ்நாட்டிலும் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சூர்யா பார்வை குறைபாடுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறித்த ரகசியம் லீக் ஆனது குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, சூர்யா சார் இப்படத்தில் பார்வை குறைபாடுள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது வெளிவந்துவிட்டது. படத்தின் முதல் பாதியை முழுவதும் இந்த சர்ப்ரைஸ் எலமென்ட்டைக் கொண்டே நான் அமைத்திருந்தேன். இடைவேளைக்கு முன்பு அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பு வரை என்ன நடக்கிறது, அந்த வெளிப்பாட்டிற்குப் பிறகு கதை எவ்வாறு நகர்கிறது என்பதுதான் படத்தின் ஹைலைட்.
Dir #JithuMadhavan about the Leak of #Suriya playing a blind character
– Before the official update from the film, it was leaked that Suriya sir is playing a blind character. I had built the entire first half around this surprise, what happens before the reveal and how the story unfolds after the reveal at the before interval.
– Since Suriya sir’s blind character was revealed at before the interval, I was scared that the surprise would be leaked even before the first look was released. After the teaser was released, everyone started talking about it, and it was really heartbreaking for me.
#Scene https://t.co/vYzGYv6hpQ— Movie Tamil (@_MovieTamil) November 11, 2026

சூர்யா சாரின் இந்த கண் தெரியாத கதாபாத்திரம் இடைவேளைக்கு முன்பே வெளிப்படுவதால், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் முன்பே இந்த சர்ப்ரைஸ் கசிந்துவிடுமோ என்று நான் மிகவும் பயந்தேன். டீசர் வெளியான பிறகும் கூட, அனைவரும் இதைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இது எனக்கு உண்மையிலேயே மிகவும் மனவேதனை அளிப்பதாக இருந்தது” என்று தனது வருத்தத்தை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார்.
