Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபீஸை அதிரவைக்கத் தயாராகும் ராம் சரண்... 'RC17' குறித்து வெளியான மாஸ் தகவல்!

பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்கத் தயாராகும் ராம் சரண்… ‘RC17’ குறித்து வெளியான மாஸ் தகவல்!

-

- Advertisement -

‘RC17’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்கத் தயாராகும் ராம் சரண்... 'RC17' குறித்து வெளியான மாஸ் தகவல்!

​டோலிவுட்டின் ‘குளோபல் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர் ராம் சரண், பான்-இந்தியா அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார். ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR) படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ (Game Changer) திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் பெத்தி திரைப்படம் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. அதே சமயம் ராம்சரண், ​தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் தனது 17-வது திரைப்படமான ‘RC17’ படத்தில் நடிக்க உள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இதன் படப்பிடிப்பானது வரும் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகளை முழுமையாக முடித்து, 2027-ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2028-ஆம் ஆண்டின் முதல் பாதியிலோ படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது.பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்கத் தயாராகும் ராம் சரண்... 'RC17' குறித்து வெளியான மாஸ் தகவல்! ​ஏற்கனவே ராம் சரண் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. ராம் சரணின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த அந்தப் படத்திற்குப் பிறகு, இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக ‘RC17’ படத்திற்காக இணைந்திருப்பது இந்திய சினிமா ரசிகர்களிடையே இப்போதே உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

we-r-hiring

​

MUST READ