கீர்த்தி சுரேஷ் – மிஸ்கின் நடிக்கும் சத்தியவான் சாவித்திரி படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்த நிலையில் அடுத்தது வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் சத்தியவான் சாவித்திரி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து மிஸ்கின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவருமே இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், ஆர். சுந்தர்ராஜன், பிரிகிடா, மாலா பார்வதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் ட்ரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சாம். சி. எஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
One woman. One case. A battle that changed everything!
#SathyavanSavithiri – TRAILER FROM TODAY.
In theatres worldwide from November 20.
#SathyavanSavithiriFromNov20 @KeerthyOfficial @DirectorMysskin @PraveenSVijaay @SamCSmusic @ZeeStudios_ @zeestudiossouth @tseriessouth https://t.co/tQIMi0yYLE
— Drumsticks Productions (@DrumsticksProd) November 12, 2026

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று (நவம்பர் 12) வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
