நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள், மீம்ஸ்கள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனுஷிடம் சமூக வலைதளங்களில் நடக்கும் ரசிகர்கள் சண்டைகள் மீம்ஸ்கள் உங்களை பாதிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், “இல்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். அவை நிச்சயமாக என்னைப் பாதிக்கும். ஆனால், நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது. விமர்சனங்களும் கமெண்ட்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதுதான் இன்றைய டிரெண்ட் என்றால், நாம் அதற்குப் பழகிக்கொள்ள வேண்டியதுதான்,” என்று மிகவும் பக்குவமாகப் பதிலளித்துள்ளார்.
Question: You started your journey 24 years ago with #OM, and it has been an incredible journey so far. What is the next beginning for you?
#Dhanush: My next beginning is the film with director #TamilarasanPachamuthu . That’s my next beginning. I’m currently trying to understand the director, and I think another week of shooting will help me understand him better. I’ve really enjoyed the experience. Thank you!
Dhanush: Thank you so much for coming, Tamil. I see OM as a very special film. It has many things that you’ve been expecting from me for a long time, and you’ll get to see glimpses of them throughout the film. I don’t want to reveal the suspense.
#Rajkumar has generously included several little moments in this film that will make you really happy. All those moments are there for you.
But #D56, directed by Tamilarasan Pachamuthu, I think will be a full-on OG fanboy celebration 🔥
https://t.co/KrBE6bKrii— Movie Tamil (@_MovieTamil) November 14, 2026
மேலும், தனது படங்களைப் பார்த்துவிட்டுத் தன் மகன்கள் சொல்லும் விமர்சனங்கள் குறித்துப் பகிர்ந்த தனுஷ், “அவர்களுடைய விமர்சனம் மிகவும் கடுமையாக இருக்கும். படம் நன்றாக இருந்தால் நான் தப்பித்துவிடுவேன். ஒருவேளை படம் சரியில்லை என்றால், அவர்களின் விமர்சனம் மிகக் கொடூரமாக (Brutal) இருக்கும். அதனால் அவர்களிடம் கருத்துக் கேட்பதற்கே நான் எப்போதும் பயப்படுவேன்,” என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.
