Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுனின் புதிய பிரம்மாண்ட படத்தின் மாஸ் அப்டேட்!

அல்லு அர்ஜுனின் புதிய பிரம்மாண்ட படத்தின் மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

தென்னிந்தியத் திரையுலகின் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 1’ மற்றும் ‘புஷ்பா 2’ ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக்குவித்து வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் வெற்றியைப் பெற்றன.அல்லு அர்ஜுனின் புதிய பிரம்மாண்ட படத்தின் மாஸ் அப்டேட்! ‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவரின் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் சாதனையையும் முறியடிக்கும் என்ற வலுவான நம்பிக்கையும் திரையுலகில் நிலவி வருகிறது.
அந்த வகையில், தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் தீவிரமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும், பிரபல இயக்குநர்கள் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோருடனும் இணைந்து அடுத்தடுத்த பிரம்மாண்டத் திட்டங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படி இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களைக் கையில் வைத்திருக்கும் அல்லு அர்ஜுனின் புதிய திரைப்படம் குறித்த மற்றுமொரு மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அல்லு அர்ஜுனின் புதிய பிரம்மாண்ட படத்தின் மாஸ் அப்டேட்!இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. குறிப்பாக, அல்லு அர்ஜுனின் திரைப் பயணத்திலேயே முதல்முறையாக ஒரு புராணப் பின்னணி கொண்ட பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படமாக இது உருவாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே போயபதி ஸ்ரீனு – அல்லு அர்ஜுன் ஆகியோரின் கூட்டணி ‘சரைனோடு’ திரைப்படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

MUST READ