Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மானின் 'ஏஓடி' ட்ரெய்லர் முதல் ஜிவி பிரகாஷின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வரை...

துல்கர் சல்மானின் ‘ஏஓடி’ ட்ரெய்லர் முதல் ஜிவி பிரகாஷின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வரை … இன்றைய சினிமா அப்டேட்ஸ்!

-

- Advertisement -

இன்றைய சினிமா அப்டேட்ஸ் 

சினிமா உலகில் இன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த மாஸ் அப்டேட்டுகள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இன்று வெளியாகும் முக்கிய சினிமாச் செய்திகள் இதோ:துல்கர் சல்மானின் 'ஏஓடி' ட்ரெய்லர் முதல் ஜிவி பிரகாஷின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வரை ... இன்றைய சினிமா அப்டேட்ஸ்!1. துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT) ட்ரெய்லர் அப்டேட்!
மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT). பவன் சதிநேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் இன்று (நவம்பர் 16) இரவு 7:00 மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஜி.வி. பிரகாஷ் – ஹரிஹரன் ராமின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!துல்கர் சல்மானின் 'ஏஓடி' ட்ரெய்லர் முதல் ஜிவி பிரகாஷின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வரை ... இன்றைய சினிமா அப்டேட்ஸ்!இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வரும் ஜி.வி. பிரகாஷ், ‘ஜோ’ படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடிக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ 3-வது பாடல் வெளியீடு!துல்கர் சல்மானின் 'ஏஓடி' ட்ரெய்லர் முதல் ஜிவி பிரகாஷின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வரை ... இன்றைய சினிமா அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவின் மல்டி-டேலென்டட் கலைஞரான விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து, இசையமைத்துள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் 3-வது பாடல் இன்று (நவம்பர் 16) வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

4. கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்!துல்கர் சல்மானின் 'ஏஓடி' ட்ரெய்லர் முதல் ஜிவி பிரகாஷின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வரை ... இன்றைய சினிமா அப்டேட்ஸ்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘சத்யவான் சாவித்திரி’. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் இன்று (நவம்பர் 16) மாலை 5:00 மணிக்குச் சென்னை வி.ஆர். மால் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

 

MUST READ