Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' படம் குறித்த புதிய அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ படம் குறித்த புதிய அப்டேட்!

-

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ்த் திரைப்படமான ‘சத்தியவான் சாவித்திரி’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' படம் குறித்த புதிய அப்டேட்!

சிங்கப்பூர் சென்சார் போர்ட்டின் தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இப்படத்திற்கு அனைத்து வயதினரும் அனுமதிக்கப்படும் வகையில் ‘பிஜி’ (PG – All Ages Allowed) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ்- மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படம் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் மற்றும் தணிக்கை குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் வழக்கறிஞரான ‘சாவித்திரி’ என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவரின் கணவர் ஒரு கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக மாறுகிறார். தன் கணவரைக் காப்பாற்றுவதற்காக, நீதிமன்றத்தில் தன் முன்னாள் குருவான மிஷ்கினை எதிர்த்து அவர் எப்படிப் போராடுகிறார் என்பதுதான் இப்படத்தின் முக்கியக் கதையாகும்.
இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 18 நிமிடங்கள் (138 நிமிடங்கள்) ஆகும். மேலும் இப்படத்திற்கு சில வன்முறை காட்சிகள் இருப்பதாக நுகர்வோர் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. படத்தில் அதிகப்படியான கொடூர விபரங்கள் இல்லாத சில வன்முறைச் காட்சிகள், அதாவது இருட்டறையில் ஒரு நபர் ராடால் தாக்கப்படுவது போன்ற மறைமுகக் காட்சிகளும், உடல் இழுத்துச் செல்லும்போது லேசான இரத்தக் கறைக் கோடு தெரியும் காட்சியும் இடம்பெற்றுள்ளன.கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' படம் குறித்த புதிய அப்டேட்!கூடுதலாக, ஒரு பெண் கழுத்து நெரிக்கப்பட்டு, பின்னர் அவர் சுதாரித்துத் தன்னை தாக்குபவரை ராடால் தாக்குவது போன்ற காட்சியும், பிஜி வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஜோடி முத்தமிடுவது மற்றும் அரவணைத்துக் கொள்வது போன்ற நெருக்கமான காட்சிகளும், கோபத்தின் வெளிப்பாடாக ஒரு கதாபாத்திரத்தால் பேசப்படும் முரட்டுத்தனமான குறிப்பு ஒன்றும் படத்தில் உள்ளதாகத் தணிக்கைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சாம்.சி. எஸ் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ