நடிகை சாய் பல்லவியும் ஸ்ரீலீலாவும் இணைந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளான சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகிய இருவரும் ஒரே மேடையில் இணைந்து செம எனர்ஜியாக நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி. அந்தப் படத்திலேயே ஒரு சிறிய காட்சியில் அவர் ஆடிய நடனம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அதனைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து ‘ரவுடி பேபி’ பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அன்றிலிருந்து சாய் பல்லவியின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
மற்றொருபுறம், தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘குண்டூர் காரம்’ திரைப்படத்தில் தனது அசுரத்தனமான நடனத்தால் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்ரீலீலா. அந்தப் பாடலும், அதில் ஸ்ரீலீலா வெளிப்படுத்திய எனர்ஜியான டான்ஸும் இந்திய அளவில் பிரபலமாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது.
Actor’s #SreeLeela & #SaiPallavi Dances 🤗
#OM Telugu Pre Release Event https://t.co/nHpVY5ZJE5
— Movie Tamil (@_MovieTamil) November 17, 2026
இப்படி இந்திய சினிமாவின் இரண்டு மிகச்சிறந்த டான்சிங் குயின்ஸான சாய் பல்லவியும், ஸ்ரீலீலாவும் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ.எம்’ (O.M) திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் இவர்கள் இருவருக்கும் டான்ஸ் நம்பர் எதுவும் இல்லை என்ற தகவல் முன்னதாக வெளியாகி, ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு இடங்களில் புரொமோஷன் மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தெலுங்கில் நடைபெற்ற ‘ஓ.எம்’ படத்தின் பிரம்மாண்ட ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் மேடையில், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் சாய் பல்லவியும் ஸ்ரீலீலாவும் இணைந்து நடனமாடியுள்ளனர். திரையில் பார்க்க முடியாத இவர்களது டான்ஸ் காம்போவை மேடையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்த நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ட்ரெண்டாகி வருகிறது.
