நடிகர் தனுஷ், மம்மூட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவனான தனுஷ் நடிப்பில், அவரது 55-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஓ.எம்’ (O.M) திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ‘அமரன்’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு தெலுங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவின் மேடையில் பேசிய நடிகர் தனுஷ், மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் இளமையான தோற்றத்தை பார்த்து மிகவும் கலகலப்பாக பேசியது அரங்கத்தில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
#Dhaunsh Request to #Mammootty 😅
– Mammootty sir, I have one request for you! Next time you come, please add a few more greys to your beard, because people are saying I look like your elder brother. That way, I’ll look younger.
#OM https://t.co/84Sf1Ds76R— Movie Tamil (@_MovieTamil) November 17, 2026
அப்போது மம்மூட்டியைப் பார்த்துப் பேசிய தனுஷ், “மம்மூட்டி சார், உங்களிடம் எனக்கு ஒரு சிறிய கோரிக்கை உள்ளது. அடுத்த முறை நீங்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, உங்கள் தாடியில் இன்னும் கொஞ்சம் நரைமுடிகளை சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஏனென்றால், உங்களைப் பார்க்கும்போது நான் உங்கள் அண்ணன் போலத் தெரிவதாக எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் நரைமுடியுடன் வந்தால்தான், பார்ப்பதற்கு நான் உங்களை விட இளமையாகத் தெரிவேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
75 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம ஸ்டைலாகவும் இளமையாகவும் காட்சியளிக்கும் மம்மூட்டியைப் பார்த்து தனுஷ் வைத்த இந்தக் கலகலப்பான கோரிக்கையை கேட்டு மம்மூட்டி உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் சிரிப்பாலும் கரகோஷத்தாலும் அதிர்ந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
