நடிகர் சிம்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிம்பு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘அரசன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தபடியாக ‘டியூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் பேண்டஸி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியானது.
இந்நிலையில் அரசன் படத்திற்கு பிறகு படப்பிடிப்புகளிலிருந்து தற்காலிக பிரேக் எடுத்துள்ள சிம்பு, தற்போது எந்தப் படத்திலும் நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறாராம். அதே சமயம் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கிடைத்திருக்கும் இந்த ஓய்வு இடைவெளியை வீணாக்காத சிம்பு, தற்போது தனது புதிய படத்திற்காகத் தனக்கே ஒரு புதிய கதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகச் சுவாரசியமான தகவல் கசிந்துள்ளது.
கீர்த்தீஸ்வரன் இயக்கும் திரைப்படம்தான் சிம்புவின் அடுத்த படமாக உருவாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில், அதற்குப் பிறகு சிம்பு நடிக்கப் போவது அஸ்வத் மாரிமுத்துவின் ஃபேண்டஸி படமா? அல்லது சிம்பு தனக்காக எழுதி வரும் இந்தப் புதிய கதையா? என்ற பெரிய கேள்விக்குறி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், சிம்பு தனக்காக எழுதி வரும் இந்தப் புதிய கதையை வேறு யாராவது இயக்கப் போகிறார்களா? அல்லது சிம்புவே இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகிறாரா? என்பது போன்ற எந்தவொரு உறுதியான தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சிம்புவின் இந்தப் புதிய முயற்சி ரசிகர்களிடையே ஒரு புதுவிதமான எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
