Homeசெய்திகள்சினிமா'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தனுஷ்!

‘ஓம்’ படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தனுஷ்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் ஓம் படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தனுஷ்!

தமிழ் சினிமாவைத் தாண்டி இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழி எல்லைகளையும் தாண்டி சாதனை படைத்து வரும் நடிகர் தனுஷ், தற்போது புகழ்பெற்ற இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து படுபிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், ‘அமரன்’ படத்தின் மூலம் இந்திய அளவில் மாபெரும் பெயரையும் புகழையும் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55-வது படமாக ‘ஓ.எம்’ (O.M) திரைப்படத்தில் நடித்துள்ளார். ​இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தனுஷ்! இப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் வலுவான கதாபாத்திரங்களாக இருக்கும் போல் தெரிகிறது.
​இதற்கிடையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலான நிலையில், தற்போது தனுஷ் தரப்பிலிருந்து மற்றொரு புதிய மற்றும் சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது.'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தனுஷ்!​அதன்படி, ‘ஓ.எம்’ படத்தின் தமிழ் பதிப்பில் இடம்பெறும் வசனங்களில் சுமார் 30 சதவீதம் தெலுங்கு மொழியிலேயே இருக்கும் என்று தனுஷ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணாக நடிப்பதாகவும், அதனால்தான் ஆந்திராவைப் பின்னணியாக கொண்ட அந்தப் கதாபாத்திரங்கள் தெலுங்கில் பேசுவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

MUST READ