Homeசெய்திகள்சினிமாமாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பநிதி நடிக்கும் புதிய படம் எப்போது தொடங்கும்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பநிதி நடிக்கும் புதிய படம் எப்போது தொடங்கும்?

-

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பநிதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பநிதி நடிக்கும் புதிய படம் எப்போது தொடங்கும்?தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ என அடுத்தடுத்த படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது இவர் கதிர், பிரியங்கா மோகன், கயடு லோகர் ஆகியோரை வைத்து ‘மஞ்சணத்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.
​இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை வைத்து மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் – இன்பநிதி கூட்டணியில் உருவாகும் புதிய படமானது மஞ்சணத்தி படத்திற்கு பிறகு தொடங்கும் எனவும் இதனை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பநிதி நடிக்கும் புதிய படம் எப்போது தொடங்கும்?​ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், இன்பநிதிக்கு ஒரு முக்கியமான படமாக அமையும் என்றும், அவரை தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக அடையாளப்படுத்தி, அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தரும் படமாக இது இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ