‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்
இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. இப்படத்தில் இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இன்று (நவம்பர் 20-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தைப் பார்த்த சினிமா விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
#SathyavanSavithiri Review: Best film of @KeerthyOfficial in recent times. A brilliantly written courtroom drama with an exciting twist at the end. The narrative swings between a tense relationship drama and strong arguments at court, with a good share of surprises. Keerthy is at her strongest since Mahanati and Mysskin is SOLID. The last 30 minutes are the knockout punch. Debutant Praveen S Vijaay impresses, this is worth a watch.
— Lets Cinema (@letscinema) November 19, 2026
அதன்படி சினிமா விமர்சகர்கள் தங்களின் பதிவில்,
சமீபகாலத்தில் கீர்த்தி சுரேஷின் மிகச்சிறந்த திரைப்படம் இது என்றும், ‘மகாநதி’ படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் தனது வலிமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். மேலும் சாவித்திரி என்ற கதாபாத்திரத்தில் படத்தின் முதுகெலும்பாக அவர் நடித்துள்ளார். அதேபோல், மார்க்கண்டேயன் என்ற கதாபாத்திரத்தில் மிஷ்கின் மிக வலுவான நடிப்பை வழங்கியுள்ளதாகவும், நீதிமன்றக் காட்சிகளில் இருவரும் பதற்றத்தை தக்கவைத்து விறுவிறுப்பைக் கூட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பதற்றமான உறவுமுறை டிராமாவிற்கும் நீதிமன்றத்தில் நடக்கும் வலுவான வாதங்களுக்கும் இடையே கதை பயணிப்பதாகவும், நல்ல திருப்பங்களுடன் சிறப்பாக எழுதப்பட்ட கோர்ட்ரூம் டிராமா என்றும் கூறியுள்ளனர். படத்தில் பாலாவின் ஒன்-லைனர் காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி ரிலீஃப் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
#SathyavanSavithiri 3.5/5 A solid courtroom drama with an unpredictable climax twist which is the surprise & highlight. Powerful performance from @KeerthyOfficial (backbone of this film) as Savitri and #Mysskin as Markandeyan keeps the tension in court gripping. @Bala_actor is the comic relief and his one liners are good. Director @PraveenSVijaay keeps you hooked and makes a strong impact. Definitely worth watching!
— sridevi sreedhar (@sridevisreedhar) November 20, 2026
குறிப்பாக, படத்தின் கடைசி 30 நிமிடங்கள் ‘நாக்-அவுட் பஞ்ச்’ போல அமைந்துள்ளதாகவும், யாரும் கணிக்க முடியாத கிளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தின் பெரிய சர்ப்ரைஸ் மற்றும் ஹைலைட்டாக உள்ளதாகவும் பதிவிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்றும் 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.
#SathyavanSavithiriReview: #SathyavanSavithiri plays out largely as a courtroom drama, but it is the kind of film where everything is done towards dramatic effect without too much concern going towards how logical or realistic they appear.
https://t.co/EPuQyVxWyg
— Chennai Times (@ChennaiTimesTOI) November 20, 2026
அதே சமயம் மற்றொரு விமர்சனத்தில், ‘சத்தியவான் சாவித்திரி’ பெரும்பாலும் ஒரு கோர்ட்ரூம் டிராமாவாகவே நகர்ந்தாலும், லாஜிக் அல்லது யதார்த்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல், முழுக்க முழுக்க நாடகத்தனமான தாக்கத்திற்காகவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
