நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த 2026-ஆம் ஆண்டில் வெளியான ‘வா வாத்தியார்’ மற்றும் ‘சர்தார் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால், ரசிகர்கள் அனைவரும் கார்த்தி தற்போது இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடித்து வரும் ‘மார்ஷல்’ திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ‘மேட்’ படத்தின் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திலும் கார்த்தி தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக கார்த்தி 30 என்று தலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் கார்த்தி இணையவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த மூன்று படங்களிலுமே கார்த்தி ஒரே மாதிரியான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் கார்த்தி இணையவுள்ள திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ பாணியிலான ஒரு கிராமத்துப் பின்னணி கொண்ட கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகவுள்ளதாம். இந்தப் படத்தில் கார்த்தி முற்றிலும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக, அடுத்தடுத்து வரிசையாக கமர்ஷியல் படங்களில் நடித்துத் தனது லைன்-அப்பை கார்த்தி வலுப்படுத்தி வருகிறார். எனவே இதன்மூலம் 2027 ஆம் ஆண்டில் கார்த்தி தரமான கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
