Homeசெய்திகள்சினிமா'எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன'.... அனிருத் - காவ்யா மாறனின் பதிவு வைரல்!

‘எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன’…. அனிருத் – காவ்யா மாறனின் பதிவு வைரல்!

-

- Advertisement -

அனிருத் – காவ்யா மாறன் இருவரும் இணைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.'எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன'.... அனிருத் - காவ்யா மாறனின் பதிவு வைரல்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சூர்யா, விஜய் போன்ற முன்னணி ஸ்டார் நடிகர்களுக்கு இசையமைத்துப் பெரிய அளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் அனிருத். இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி எனப் பிற மொழிகளிலும் கால் பதித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பதித்துள்ளார். ​இந்நிலையில், அனிருத் சமீபத்தில் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. மு.க. ஸ்டாலின், ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நாளை (நவம்பர் 21) சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
​இச்சூழலில், அனிருத் தனது திருமணப் புகைப்படங்கள் மற்றும் காவ்யா மாறனுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவரும் இணைந்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்தப் பதிவில், “எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன. உங்கள் அன்பும் ஆசிகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. எங்களின் இந்தப் புதிய தொடக்கத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றியதற்கு மிக்க நன்றி. உங்கள் அனைவரின் அன்பையும் நாங்கள் எப்போதும் எங்களுடன் சுமந்து செல்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் திருமணப் புகைப்படங்களும் இந்தப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

​

MUST READ