
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ரம்யா கிருஷ்ணனுக்கும், அவரது கணவரும் இயக்குநருமான கிருஷ்ணா வம்சிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு ரம்யா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளதாகத் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவருக்கும் இடையே உறவு இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வந்தன. இது தொடர்பாகப் அவர் அளித்துள்ள விளக்கத்தில், தாங்கள் பிரிந்து இருப்பது உண்மைதான் என்பதை ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடிந்ததாகவும், ஹைதராபாத்திற்கு அடிக்கடி செல்ல முடியாத சூழலில் தனது மகன் மற்றும் கணவரை விட்டுப் பிரிந்திருந்தது தங்களது குடும்பத்தை பாதித்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் இருவருக்கும் பணி இல்லாத நேரங்களில் மட்டுமே சந்திக்க முடிந்ததாகவும் கூறியிருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வது (Live-in) குறித்து கிருஷ்ணா வம்சி பேசியதை நினைவு கூர்ந்த ரம்யா கிருஷ்ணன், திருமண பந்தம் என்பது இரு குடும்பங்களைத் தாண்டிச் சுற்றியுள்ள சமூகத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவதாகக் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து வதந்திகளை மறுத்துள்ள ரம்யா கிருஷ்ணன், கணவருடனான தனது உறவு சிறப்பாகவே உள்ளதாகவும், தாங்கள் விவாகரத்து செய்யவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனித்தனியாக வசிப்பதால் திருமண உறவிலிருந்து விலகிவிட்டதாக அர்த்தமில்லை என்றும், தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்வதற்குப் பதிலாகத் தனித்தனியாக இருந்து நல்ல நண்பர்களாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மகளைப் பற்றி அவதூறு: நடிகர் அர்ஜுன் காட்டமான அறிக்கை – சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
