சூர்யா 48 பட ஷூட்டிங் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா, தனது ‘சீன்’ படத்திற்கு பிறகு தற்போது தனது 48-வது படமான ‘சூர்யா 48’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார். ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநரான டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூர்யா மற்றும் டி.ஜே. ஞானவேல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்திருப்பது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. இப்படத்தில் சூர்யா மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தை ஹோம் பாலே ஃபிலிம்ஸ் மற்றும் லகரம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சாய் அபயங்கர் இசையமைத்து வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கயடு லோகர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஐஸ்வர்யா லட்சுமியும் இப்படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இவ்வாறு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. இதற்கிடையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இது தவிர இந்த படத்தை 2027 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
