Homeசெய்திகள்சினிமாகதைக்காக பெரிய ஆஃபரை மறுத்த கார்த்திக் சுப்பராஜ்.... 'பீட்சா' படம் உருவான பின்னணி!

கதைக்காக பெரிய ஆஃபரை மறுத்த கார்த்திக் சுப்பராஜ்…. ‘பீட்சா’ படம் உருவான பின்னணி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘பீட்சா’. கதைக்காக பெரிய ஆஃபரை மறுத்த கார்த்திக் சுப்பராஜ்.... 'பீட்சா' படம் உருவான பின்னணி!இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. விறுவிறுப்பான திரைக்கதையில் பல திருப்பங்களுடன் வெளியான இந்த படம் இன்று வரையிலும் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகன் தேர்வு குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சி.வி. குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முதலில் ‘பீட்சா’ கதையை இரண்டு அல்லது மூன்று வளர்ந்து வரும் நடிகர்களிடம் கூறியபோது, அவர்கள் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டனராம். அதன்பிறகு, புதுமுகங்களை நடிக்க வைக்கலாம் எனத் திட்டமிட்ட படக்குழு, இறுதியாக விஜய் சேதுபதியை கதாநாயகனாகத் தேர்வு செய்தது.கதைக்காக பெரிய ஆஃபரை மறுத்த கார்த்திக் சுப்பராஜ்.... 'பீட்சா' படம் உருவான பின்னணி!இதற்கிடையே, ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ‘பீட்சா’ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு ஒரு சுவாரசியமான ஆஃபருடன் முன்வந்துள்ளார். அதாவது, இப்படத்தில் நடிகர் சித்தார்த்தை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என்றும், சித்தார்த்தின் சம்பளம் மற்றும் படத்தின் ஒட்டுமொத்த தயாரிப்பு செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறிய அவர், பாதிக்கு பாதி பார்ட்னர்ஷிப் அடிப்படையில் இப்படத்தைத் தயாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது தேர்வில் மிக உறுதியாக இருந்துள்ளார். பெரிய நட்சத்திர நடிகரை உள்ளே கொண்டு வந்தால், அது கதையில் சில மாற்றங்களையும் சமரசங்களையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் கருதினார். கதைக்காக பெரிய ஆஃபரை மறுத்த கார்த்திக் சுப்பராஜ்.... 'பீட்சா' படம் உருவான பின்னணி!மேலும், அந்தக் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதிதான் மிகச்சரியான தேர்வாக இருப்பார் என்பதில் அவர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இயக்குநரின் இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு தயாரிப்பாளர் சி.வி. குமாரும் முழு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியையே கதாநாயகனாக வைத்துப் படக்குழு ‘பீட்சா’ திரைப்படத்தை உருவாக்கியதாம். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் கார்த்திக் சுப்பராஜுக்கு இருக்கும் துல்லியமான கணிப்பும், கதையின் மீதான அவரது உறுதியும் இந்தச் சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

 

MUST READ