Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஓபனிங்.... 'ஓ.ம்' பட முதல் நாள் வசூல் ரிப்போர்ட்!

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஓபனிங்…. ‘ஓ.ம்’ பட முதல் நாள் வசூல் ரிப்போர்ட்!

-

- Advertisement -

ஓ.ம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஓபனிங்.... 'ஓ.ம்' பட முதல் நாள் வசூல் ரிப்போர்ட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த ‘ஓ.ம்’ (OM) திரைப்படம் நேற்று (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியானது. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். மேலும் மம்மூட்டியின் ஆளுமை மற்றும் சாய் அபியங்கரின் இசை ஆகியவை படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன. அதே சமயம், படத்தின் திரைக்கதையில் விறுவிறுப்பு சற்றுக் குறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஓபனிங்.... 'ஓ.ம்' பட முதல் நாள் வசூல் ரிப்போர்ட்!இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் மாலை மற்றும் இரவுக் காட்சிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் அமைந்துள்ளது. கலவையான விமர்சனங்களுக்கு இடையேயும், இப்படம் இந்தியாவில் ரூ. 20 கோடிக்கும் அதிகமாகவும், உலகம் முழுவதும் ரூ.31 கோடிக்கும் அதிகமாகவும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

MUST READ