தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதாவது நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நான்கு முதல் ஐந்து திரைப்படங்கள் துரதிர்ஷ்டவசமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. இதனால், தனது அடுத்தடுத்த படங்களைத் தேர்ந்தெடுப்பதில் தனுஷ் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில், தனுஷ் அடுத்ததாக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் D56 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் கிராமத்துப் பின்னணி கொண்ட ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், தனுஷ் கோயில் பூசாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல சுவாரசியமான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படுத்துகிறது. இது தவிர, இயக்குநர்கள் மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருடனான படங்களும் தனுஷின் அடுத்தடுத்த திட்டங்களில் உள்ளன. மேலும், சஞ்சய் லீலா பன்சாலியின் கதையில் உருவாகவுள்ள ஒரு திரைப்படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஆனால், இப்படத்தை பன்சாலி இயக்காமல், வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு அடுத்தடுத்த படங்களைத் தேர்ந்தெடுப்பதில் தனுஷ் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலையில், இவர்களைத் தவிர வேறு புதிய இயக்குநர்கள் யாரேனும் அவரது லைன்-அப்பில் இணைவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதே சமயம் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
