மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் தனி இடம்பிடித்தவர் சாய் பல்லவி. இவருடைய நடனத்திற்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அடுத்தது தமிழ் மற்றும் மலையாளம் மட்டுமின்றி, தற்போது தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.
இவர் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அந்த வகையில், ‘கார்கி’ மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘அமரன்’ ஆகிய படங்களில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த 2026-ஆம் ஆண்டில் வெளியான ‘ராமாயணா’ மற்றும் ‘ஓ.ம்’ என இரண்டு படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலுமே முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியுள்ளார். குறிப்பாக, ‘ராமாயணா’ படத்தில் சீதையாக மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சாய் பல்லவி, ‘ஓ.ம்’ படத்தில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ளார். இப்படத்திற்காகத் தனது தலைமுடியைக் குறைத்து, ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பேசும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அதிரடி காட்டியுள்ளார்.
படம் முழுவதும் அபாரமான நடிப்பை வழங்கியுள்ள சாய் பல்லவி, கிளைமாக்ஸ் காட்சியில் தனது நடிப்பால் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கிறார். அதிலும் ஒரு சண்டைக்காட்சியில் வேற லெவலில் மிரட்டியுள்ளார். ஓ.ம் படத்தில் தனுஷ் ஒருபுறம் இருந்தாலும், படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு முதன்மை ஹீரோவுக்கு இணையான கம்பீரத்தையும், பலத்தையும் படம் முழுவதும் தாங்கி நிற்கிறார். அந்த வகையில், ‘ஓ.ம்’ படத்தின் மிகப்பெரிய ஹைலைட்களில் ஒருவராக சாய் பல்லவி திகழ்கிறார்.
