2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.


ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மரகத நாணயம் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல் அனி போப், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட முதல் பாக நடிகர்களுடன் சத்யராஜ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மரகத நாணயம் 2’ படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். தீபக் மேனன் மற்றும் பி.வி. சங்கர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். திருமலை ராஜன் படத்தொகுப்பையும், ராஜேஷ் கண்ணன் வசனங்களையும் கவனித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனராக முதல் படம்: ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ எப்படி இருக்கிறது?
