Homeசெய்திகள்சினிமா'சீன்' மற்றும் 'மூக்குத்தி அம்மன் 2' படங்களின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

‘சீன்’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படங்களின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

‘சீன்’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படங்களின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.'சீன்' மற்றும் 'மூக்குத்தி அம்மன் 2' படங்களின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியிருந்த ‘சீன்’ திரைப்படம் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவில் 260 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து வரும் இப்படம், தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்தப் படம் டிசம்பர் 4-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் ரெஜினாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. மேலும் ஊர்வசி மற்றும் யோகி பாபுவின் காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. 'சீன்' மற்றும் 'மூக்குத்தி அம்மன் 2' படங்களின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!இருப்பினும் பலமான திரைக்கதை இல்லாததாலும் பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை என்பதாலும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. அதே சமயம் வசூலிலும் இந்தப் படம் பின்தங்கியுள்ளது.
இதற்கிடையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஓடிடி உரிமையை ஏற்கனவே ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதியே இந்தப் படமும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ