Homeசெய்திகள்சினிமாதிருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி...

திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!

-

- Advertisement -

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது, பிரபல நடிகர் மம்மூட்டி அதிகாலையில் ஒரு மணி நேரமாக வழி தெரியாமல் தவித்தார். அவருக்கு 10 கி.மீ தூரம் இருசக்கர வாகனத்தில் உடன் வந்து உதவிய பூலாங்குறிச்சியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்குப் பாராட்டு தெரிவித்து, சமூக வலைதளங்களில் மம்மூட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

அதிகாலையில் ஏற்பட்ட குழப்பம்

காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுவிட்டு, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அதிகாலை கேரளாவுக்கு செல்வதற்காக நடிகர் மம்மூட்டி காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தார்.

காரைக்குடி – மேலூர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச் சாலையில் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் மம்மூட்டியின் கார் வந்தது. அப்பகுதியில் பல சாலைகள் பிரிந்ததால், எந்த சாலையில் செல்வது என்பதில் ஓட்டுநருக்குக் குழப்பம் ஏற்பட்டது.

கூகுள் மேப் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்

கூகுள் மேப் உதவியை நாடியும் சரியான சாலையை அவர்களால் கண்டறிய முடியவில்லை. அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்தோர் வழிகாட்டியும் சரியான வழியைக் கண்டறிய முடியாமல் திணறினர்.

இதனால், அவர்கள் மீண்டும் காரைக்குடிக்கே செல்ல முடிவெடுத்தனர். ஒரு மணி நேரமாக அங்கேயும் இங்கேயும் கார் சென்று வந்ததை, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த பூலாங்குறிச்சியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கவனித்தார்.

10 கி.மீ தூரம் முன்சென்று வழிகாட்டிய இளைஞர்

பின்னர், பாண்டியன் அவர்களிடம் சென்று, “நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?” என கேட்டுள்ளார். காரில் நடிகர் மம்மூட்டி இருந்ததைப் பார்த்த பாண்டியன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, 10 கி.மீ. தூரம் வரை முன்னே செல்ல, மம்மூட்டியின் கார் அவரைப் பின்தொடர்ந்தது. மதுரைக்கு செல்லும் சரியான சாலையைக் காட்டிவிட்டு பாண்டியன் திரும்பினார்.

கட்டியணைத்து வாழ்த்திய மம்மூட்டி

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த மம்மூட்டி, காரில் இருந்து இறங்கி வந்து பாண்டியனுடன் நின்று வீடியோ எடுத்துக்கொண்டார். அப்போது அவரை கட்டியணைத்து “நம்ம பிரண்ட்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். தற்போது பாண்டியனைப் பாராட்டி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மம்மூட்டி பதிவிட்டுள்ளார்.

பாண்டியனின் இரட்டிப்பு மகிழ்ச்சி

இதுகுறித்து பாண்டியன் கூறுகையில், “வழி தெரியாமல் தவித்த அவர்களுக்கு முதலில் அங்கு நின்றுகொண்டுதான் வழி காட்டினேன். ஆனால் காரில் நடிகர் மம்மூட்டி இருந்ததைப் பார்த்ததும், எனது இருசக்கர வாகனத்தைக் காருக்கு முன்னே ஓட்டிச் சென்றவாறு மதுரை செல்ல வழிகாட்டினேன். என்னை பாராட்டி மம்மூட்டி பதிவிட்டது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அஷ்வத் மாரிமுத்து – ரஜினி கூட்டணி! ‘தர்மன்’ டீமின் சுதந்திர தின வாழ்த்தால் ஆடிப்போன இணையதளம்!

MUST READ