பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
தற்போது தமிழ் சினிமாவின் யங் சென்சேஷன் ஆக அசத்தி வருகிறார். 2018 -ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் முதல் படத்திலே ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது ‘லவ் டுடே’ படத்தின் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார் பிரதீப்.
தற்போது பிரதீப் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் பேச்சு உள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிதுன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு. அப்படி நடந்தால் பிரதீப் அதற்கடுத்த படத்தில் தீபிகா படுகோனே உடன் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.
என்ன செய்தி என்று பொறுத்திருந்து பாப்போம்!