நடிகை பிரியாமணி, விஜயின் ஜனநாயகன் படம் குறித்து பேசி உள்ளார்.
நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர். அதைத் தொடர்ந்து இவர் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போதைய இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய், பிரியாமணி, பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ், மேனன், மமிதா பைஜு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த படத்தில் இருந்து முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நடிகை பிரியாமணி ஜனநாயகன் படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “நான் விஜயின் தீவிர ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய காம்பினேஷன் காட்சிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.