லிட்டில் ராக்ஸ்டார் இது உனக்கு தான்… குட்டிப் பையனை குஷிப்படுத்திய அனிருத்!

அனிருத் தன்னை பாட்டு பாடி அசத்திய சிறுவனுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

அனிருத் தான் தற்போது தமிழ் சினிமாவின் டாப் 1 இசையமைப்பாளர். அதுமட்டுமில்லாமல் தற்போது பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை தன் இசையால் ஆட்டிப்படைத்து வருகிறார்.

தற்போது லியோ, ஜெயிலர், இந்தியன் 2 என பல டாப் ஸ்டார் படங்களை கைவசம் வைத்துள்ள ராக் ஸ்டார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம், இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்திற்கும் இசையமைக்கிறார்.

இதற்கிடையில் பல லைவ் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் இசை பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ஒரு ஆர்வமிக்க குட்டிப் பையன் ‘லியோ தீம்’ பாடலைப் பாடினார். அதைப் பார்த்து குஷியான அனிருத் அந்த குட்டிப் பையனுக்கு தான் அணிந்திருந்த கண்ணாடியை பரிசாக கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement