Homeசெய்திகள்தமிழ்நாடுகலாஷேத்ரா விவகாரம்- தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்

கலாஷேத்ரா விவகாரம்- தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்

-

கலாஷேத்ரா விவகாரம்- தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்

கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் தலைமைச் செயலாளரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார்.

கலாஷேத்ரா விவகாரம் - தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ஃபவுண்டேஷன் சார்பில் ருக்மணி தேவி நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ – மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததால் நிலையில் கல்லூரியில் இருந்து பாதியில் வெளியேறியதாக குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று ஹரிபத்மன், மாதவரத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனையெடுத்து அவர் சைதாப்பேட்டை 18 ஆவது நீதிமன்றத்தின் நீதிபதி சுப்ரமணியன் முன்பு ஆஜர் படுத்தப்படுத்தி வரும் 13ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இந்த சூழலில் கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் தலைமைச் செயலாளரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார். சுமார் 200 பக்கங்களுக்கு மேலாக உள்ள அறிக்கையை வழங்கிவிட்டு அரைமணி நேரத்திற்கு மேலாக விளக்கம் அளித்துவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றார்.

 

MUST READ