ஒன்றிய பாஜகவின் அதிகாரப் பறிப்பை முடிவுக்கு கொண்டு வர கூட்டாசியே ஒரே தீரவு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிக்காட்டி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இறுதியில் எழுதியதுதான் மாநில சுயாட்சி கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒன்றிய-மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை சட்டமன்றத்தில் விரைவில் வைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தாா். தற்போது அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் ஒன்றிய அரசு வைத்துக்கொண்டு, மாநில அரசுகளை மதிப்பதில்லை என முதலமைச்சர் குற்றம்சாட்டினாா். ”இன்னும் எத்தனை காலங்கள் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளாா்.
1969 ஆம் ஆண்டில் கலைஞர் தலைமையில், ஒன்றிய – மாநில் அரசு உறவு பற்றி ஆய்வு செய்ய பி.வி.ராஜ மன்னாா் தலைமையில் ராஜ மன்னார் குழுவை அமைக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் கலைஞர் நிறைவேற்றினாா் என்று நினைவூட்டினார். அதனை தொடர்ந்து சர்காரியா, வெங்கடாசலய்யா, பூஞ்சி உள்ளிட்ட குழுக்கள் அமைத்து ஆய்வ செய்யப்பட்ட போதிலும், மாநில சுயாட்சியை உறுதி செய்யும் வகையில் தீர்மானமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போது வரை மாநில சுயாட்சி உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஏமாற்றம் நீடிக்கிறது என்றாா்.
மாநிலத்தில் சுயாட்சி வேண்டும்; ஒன்றியத்தில் கூட்டாச்சி மலர வேண்டும் என என்பதே திமுக அரசின் நிலைப்பாடு என வலியுறுத்தினார். வரிப்பகிர்வு குறைப்பு, ஒத்திசைவு பட்டியலில் உள்ள அம்சங்களை ஒன்றிய அரசு பட்டியலுக்கு மாற்றதல் போன்ற நடவடிக்கை மாநிலங்களின் அதிகாரத்தை சுருக்குவதாக கூறினார். மாநில் சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் விலியுறுத்தினாா்.
கூட்டாச்சி தத்துவத்தை அரசியல் சட்டத்தின் கோட்பாடாக மாற்ற வேண்டும். இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாசியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய நேரம் இதுவென தெரிவித்தார். மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் ஒன்றிய அரசும் வலுவாக இருக்கும் எனவும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே தீர்வு மாநில சுயாட்சிதான் எனவும் கூறினார்.
ஒன்றிய பாஜகவின் அதிகாரப் பறிப்பை முடிவுக்கு கொண்டு வர கூட்டாசியே ஒரே தீரவு என முதலமைச்சர் தெரிவித்துள்ளாா். இதன் தொடர்பான அறிக்கை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
”கொட்டக் கொட்டக் குனிபர்வகள் அல்ல நாம், நாம்தான் இதை செய்ய வேண்டும் நம்மை விட்டால் நிச்சம் யாரும் இல்லை” என உறுதியுடன் தனது உரையை முதலமைச்சர் நிறைவு செய்தார்.
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


